• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Juli 8, 2026

இணையவழி மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சிறிலங்கா  மத்திய வங்கி (CBSL) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மத்திய வங்கியின் ‚மோசடிக்கு ஆளாகாதீர்கள்‘ என்ற விழிப்புணர்வுப் பிரசாரத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்படடுள்ளது.

ஒரு மணி நேரத்தில் கணக்கு முடக்கப்படும்“ என்பது போன்ற செய்திகளை அனுப்பி, மோசடிக்காரர்கள் மக்களை சிந்திப்பதற்கு அவகாசம் தராமல் அவசரமாக செயல்படத் தூண்டுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

‚அவசரம்‘ என்ற எச்சரிக்கை அறிவிப்பினை பன்படுத்தி மோசடிக்காரர்கள் பொதுமக்களின் பயத்தையும் பதற்றத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

எனவே, வங்கிக் கணக்குகள், பணப் பரிவர்த்தனைகள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி வரும் எதிர்பாராத செய்திகள் மற்றும் அழைப்புகள் குறித்து பொதுமக்கள் நிதானமாகச் சிந்தித்து, அவற்றைச் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிதி நுகர்வோரை விழிப்புணர்வூட்டவும், இணையவழி மற்றும் ஒன்லைன் நிதி மோசடிகளின் அபாயங்களைக் குறைக்கவும் மத்திய வங்கி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.