• Di.. Aug. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் யாழை சேர்ந்த ஊடகவியலாளர் திடீர் மரணம்

Juli 30, 2026

கனடாவில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு  உயிரிழந்துள்ளதுள்ளதாக  கூறப்படும்  நிலையில் ஊடகவியலாளரின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நீண்டகால ஊடக அனுபவம் கொண்டிருந்த அவர், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி மையத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி பல திறமையான ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், பிரபல பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய அவர், பல முக்கிய சமூகப் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகசெய்தி தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததோடு, அவர்களது உரிமைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட ஆளுமையாகவும் விளங்கியுள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை நடுநிலையுடன் வெளியிட்டு, உண்மைத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் மறைந்தாலும், ஊடகத்துறைக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளும், அவர் பதித்த தடங்களும் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என யாழ்ப்பாண ஊடக மன்றம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.