பெருவில் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் பாரம்பரியப் பகுதியான நாஸ்கா கோடுகளுக்கு (Nazca Lines) மேலே பறந்துகொண்டிருந்த சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Cessna Caravan C-208 வகையைச் சேர்ந்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் 11 சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் பயணித்திருந்தனர் என்றும் உயிரிழந்தவர்களில் 2 ஜெர்மனி, 2 ஸ்பெயின் மற்றும் 7 இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக பெருவின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
