• Di.. Aug. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

Aug. 4, 2026

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நுவரெலியா கினிகத்தென பொல்பிட்டியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த நிலையிலே குறித்த நான்கு பேரும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில், குசும் ரத்நாயக்க (தாய்) ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, (மூத்த சகோதரி)மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய சகோதரி) மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்). ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

  நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.