• Di.. Aug. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புதன் பெயர்ச்சி ; சில ராசிகளுக்கு காத்திருக்கும் ராஜயோகம்

Aug. 5, 2026

தற்போது புதன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் ஆகஸ்ட் 05 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் சந்திரனின் ராசிக்கு செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

முக்கியமாக கடக ராசியில் புதன் நுழையும் போது அந்த ராசியில் உள்ள சூரியனுடன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகமும் உருவாவதால், 3 ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களைப் பெறவுள்ளனர்.

புதன் பெயர்ச்சி ; சில ராசிகளுக்கு காத்திருக்கும் ராஜயோகம் | Mercury Transit Brings Rajayoga For These Signs

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் 

ரிஷபம் : ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கடகம்: கடக ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலைகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டபடி நடக்கும்.

சிம்மம்: சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.