• Di.. Sep. 8th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நல்லூர் திருவிழாவுக்குக் காளாஞ்சி கையளிப்பு!

Aug. 7, 2026

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (07-08-2026) காலை கல்வியங்காட்டில் நடைபெற்றது. 

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர், கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.