• Di.. Sep. 8th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்று வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்

Aug. 17, 2026

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை 25 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ளது.

இன்று காலை 8.15 அளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. 

இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர். உள் நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் நல்லூர் கந்தனை தரிசிக்க நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் மட்டுமல்லாது, இக்கால பகுதியில் , வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வ சன்னதியான் ஆலய மகோற்சப பெருவிழாவும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்; குவிந்த பக்தர்கள்! | Nallur Kandaswamy Temple In Jaffna Festival 2026
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.