• Di.. Sep. 8th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நடுவானில் விமானத்தில் இன்ஜின் கோளாறு; அச்சத்தில் உறைந்த பயணிகள்!

Sep. 1, 2026

கோவாவில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் கோவாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு, அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இண்டிகோவின் 6E 2102 விமானம் இன்று காலை 9.15 மணிக்கு கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்டது.

திட்டமிட்ட நேரத்தைவிட 5 நிமிடங்கள் தாமதமாக விமானம் புறப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே அதன் ஒரு இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விமானிகள், விமானத்தை மீண்டும் கோவாவுக்குத் திருப்பினர். விமானம் கோவா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், சிறிது நேரத்துக்கு ‘முழு அவசரநிலை’ அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.