• Di.. Okt. 6th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இறைச்சி மற்றும் முட்டை விலை அதிகரிப்பு – வெளியான தகவல்

Okt. 3, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை உயரக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவிக்கையில், விலங்குகளின் தீவனத்திற்காக சோளத்துக்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்துவதால், கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி விரைவாக வீழ்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை, நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் (Palm Oil) இறக்குமதித் தடையை மீண்டும் நீக்குவதற்கு சில தரப்புகள் ஆயத்தமாகி வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.