• Di.. Nov. 10th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் புத்தூர் சந்திப் பகுதியில் கோர விபத்து அபிவிருத்தி உத்தியோகத்தரான பெண் பலி

Okt. 6, 2026

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இன்று (06) இடம்பெற்ற வீதி விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது

விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரான 36 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.