ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார்.
அந்த வகையில் செவ்வாய் அக்டோபர் 17 ஆம் திகதி ஆயில்யம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் செவ்வாய் நவம்பர் 12 வரை இருப்பார். செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்போது செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அதோடு வருமானத்தில் நல்ல உயர்வும் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், புதிதாக பணத்தை முதலீடு செய்வதற்கு முன் அனைத்து அம்சங்களையும் சரிபார்ப்பது அவசியமாகும்.
மகரம் : செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலம் கடன் சுமை குறையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்.
