சிறுப்பிட்டி தெற்கைப்பிறபிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சரவணபவானந்தன் இன்று 5.10.2021 இரவு 9மணியளவில் காலமானார்.

 அன்னார் காலஞ்சென்ற செல்வராசா கனகம்மா ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற தம்பிநாதர் வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மருமகனும் காலஞ்சென்ற ஜெயலட்சுமியின் அன்புக்கணவரும் சியாமளா (மாலா) அனுசுயா (சூரா) (ஜெர்மனி)கெங்காதரன் (அப்பன்) (சுவிஸ்) 

சண்முகப்பிரியா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும் காலஞ்சென்ற ஹீவிஜயகுமார், பங்கேஸ்வரன் (ஜெர்மனி) வசந்தகுமாரி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் காலஞ்சென்ற கிரிசாந், வினோஜ் (பிள்ளையார்) நிவேதா-தினேஸ், நிரூபன் (ஜெர்மனி) அஸ்வின், அஸ்வன் (சுவிஸ்) மாதங்கி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் சச்சிதானந்தம் காலஞ்சென்ற சதானந்தம் காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும் காலஞ்சென்ற செல்லாச்சிப்பிள்ளை, குணபூசனி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார் அன்னாரின் ஈமைக்கிரியை நாளை புதன்கிழமை மதியம் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 2 மணியளவில் காளையன்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

 தகவல் குடும்பத்தினர்

Von Admin