மஸ்கெலியா நல்லதண்ணி – ஸ்ரீபாத மலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவத்தால் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று (23) உணவு சமைத்துகொண்டிருந்தபோது,எரிவாயு அடுப்பு ​வெடித்துள்ளது.

சம்பவத்தில் குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் பலத்த காயமடைந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Von Admin