கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3 ஆம் திகதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மேற்கு வங்க அரசு சார்பில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 3 ஆம் திகதி முதல் மேற்கு வங்க மாநிலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தில்லா நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறும் முன் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என மேற்கு வங்க மாநில அரசு தமது கடிதத்தில் தெரிவித்துள்ளது. 

Von Admin