வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3ஆம் திகதிவரை கன மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கீழைக்காற்றின் செல்வாக்குக் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு அவ்வப்போது மழை பெய்யும். இந்த நிலைமை எதிர்வரும் 3ஆம் திகதிவரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, நாளையும், நாளைமறுதினமும் வடக்கு மாகாணத்தில் சற்றுக் கன மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.