• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வவுனியாவில் மீண்டும் வெடித்து எரிவாயு அடுப்பு

Jan. 3, 2022

வவுனியாவில் வீடொன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளம், புகையிரத வீதி மூன்றாம் ஒழுங்கையில் இன்று மதியம் 3.01 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென எரிவாவு அடுப்பு வெடித்துள்ளது.

இதையடுத்து குறித்த பெண் எரிவாவு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளார். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். 

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.