திங்கட்கிழமை (10-01-2022) முதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நாளை திங்கட்கிழமை (10) முதல் ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த அனுமதி இலங்கை மின்சார சபையின் கோரிக்கையினை அடுத்தே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிசக்தி அமைச்சினால் வழங்கப்பட வேண்டிய எரிபொருள் வழங்கப்படாமை மற்றம் களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Von Admin