அம்பாறை, எக்கலோயா பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்று காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரது சடலங்களும் அம்பாறை பொது வைத்தியசாலையிலும் ஒருவரின் சடலம் பிராந்திய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த ஏனைய ஐவரும் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Von Admin