• Do.. Feb. 13th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். நல்லூர் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா!

Jan. 17, 2022

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது.

தைப்பூசத்தினத்துக்கு முதல் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் சென்றனர்.

அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்குதல் மரபாக பண்பாட்டு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்தப் புதிர் விழா 288ஆவது ஆண்டாக இந்த வருடமும் கடைப்பிடிக்கப்பட்டது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed