சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திரு சத்தியதாஸ் ஊடாக சிறுப்பிட்டி பொது மண்டபத்தில் வைத்து கோப்பாய் பிரதேச செயளார் சுபாசினி மதியழன் என்பவரால் தலா
10 பேருக்கு துவிச்சகர வண்டியும் 10ஆயிரம் ரொக்க‌ பணமும் .பார்வைற்ற மூவருக்கு தாலா 50 ஆயிரம் ரொக்கப்பணமும் வழங்கிவைக்கப்பட்டது.

கௌரீ சுப்ரமணியம் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் கோயிலடியைச்சேர்ந்த சாரதா இராமலிங்கத்தின் மகன் ஆவார்.
இரு கண்களையும் இழந்த இவர் தனது பாடல் திறமையால் கிடைக்கும் வருமானத்தில் தாயகத்தில் உதவிகள் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த உதவியை வழங்கிய கனடா கௌரீஸ் சுப்ரமணியம் அவர்கட்டு வாழ்த்துக்களையும்.
இதை வழங்கி வைத்த கோப்பாய் பிரதேச செயளர்
சுபாசினி மதியழன் அவர்கட்க்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.
சிறுப்பிட்டி இணையமும் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.

Von Admin