கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவரும் காணாமற் போயுள்ளதாக ரொறன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யோசாந்த் ஜெகதீஸ்வரன் (29) என்ற இளைஞரே காணாமற் போனவராவார். கடைசியாக ஜனவரி 15, 2022 அன்று மதியம் 12:10 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ட்ரெத்வீ டிரைவ் பகுதியில் காணப்பட்டார்.

குட்டையான கருப்பு முடி, தாடி மற்றும் பழுப்பு நிற கண்களுடன் காணப்படுகிறார். அவர் கருப்பு நிற குளிர்கால ஜாக்கெட், அணிந்திருந்தார்.

அவர் கடைசியாக சிவப்பு நிற CFMK 918 என்ற உரிமத் தகடு கொண்ட சாம்பல் நிற டொயோட்டா கேம்ரியை ஓட்டிச் சென்றுள்ளார்.

இதேவேளை காணாமற்போனதாக கூறப்படும் பிரசாந்தி அருச்சுனன் என்ற யுவதி இவருடன் இருக்கலாம் என கனேடிய விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.  

அதே நேரம் கனடாவில் தமிழ் யுவதி ஒருவரும் காணமல் போயுள்ளார்

கனடாவின் ரொறன்ரோவில் தமிழ் யுவதி ஒருவர் காணாமற்போன நிலையில் அவரை கண்டுபிடிக்க அந்நாட்டு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பிரசாந்தி அருச்சுனன், (28) என்பவரே காணாமற் போனவராவார்.கடைசியாக ஜனவரி 16, 2022 அன்று இரவு 7:45 மணிக்கு ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் காணப்பட்டார்.

நடுத்தர உடல், பழுப்பு நிற கண்கள், கருப்பு நேரான முடி மற்றும் நடுத்தர நிறம் என அவரது அங்க அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு முறையிடலாம் என தெரிவிக்கப்படுகிறது

Von Admin