கிளிநொச்சி தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் (20 01.2022) நள்ளிரவு தாயும் அவரது 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுரம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச் சம்பவம் நடைபெற்றவேளை குடும்பசுமை காரணமாக தந்தையும் மகனும் வெளிமாவட்டத்தில் கூலிவேலைக்கு சென்றிருந்தனர்.

47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி (07பிள்ளைகளின் தாயார்), அவரது மகள் 17 வயதுடைய லக்சிகா ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.

இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரவிசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.