ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேறறு சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளை பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த டிசம்பர் (2021) மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியது. அதன் பிரகாரம் பிரித்தானியாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை திங்கள் பிரித்தானிய பாரளுமன்றம் உட்பட பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழ் தகவல் நடுவம் (TIC) நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்ய தமிழர் மரபு திங்கள் நிகழ்வு லண்டன் கிங்ஸ்ரன் நகர நியூ மோல்டனில் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்ப பிரதான நிகழ்வாக கிங்ஸ்டன் நகர பெயர்ப்பலகையில் யாழ்ப்பாண நகரத்தின் பெயரும் இணைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

Von Admin