• So.. Mai 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.சுன்னாகத்தில் முதியவர் மீது மோதிய மோட்டர் சைக்கிள்! முதியவர் பலி

Jan. 25, 2022

யாழ்.சுன்னாகம் நகரில் உள்ள மதுபானசாலையில் இருந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்கள் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த சம்பவத்தில், ராசா ரவிச்சந்திரன் என்ற 50 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்தார். சுன்னாகம் மதுபான சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தென்மராட்சியைச் சேர்ந்த இருவர் கொள்ளையிட்டு தப்பித்ததை மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் கண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர் உளிட்டோர் துரத்திச் சென்ற நிலையில், கொள்ளையர் பயணித்த மோட்டார் சைக்கிள் சுன்னாகம் சந்தி வீதி சமிஞ்சை விளக்கு பகுதியில் எதிரே வந்தவரை மோதித்தள்ளியது. சம்பவ இடத்திலேயே அதிக குருதிப் போக்கு போன நிலையில் அவர் உயிரிழந்தார்.

கொள்ளையர்கள் இருவரும் பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed