கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மார்ச் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அந்தோனியார் ஆலயம் புனித ஆயர் வசந்தன் அடிகளார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

கொரோனா தொற்று காரணமாக இந்திய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு திருவிழாவில் 500 இலங்கையர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். கச்சத்தீவு திருவிழா தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Von Admin