ஜேர்மனியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான கைசெஸ்லவுட்டன் (Kaiserslautern) இச்சம்பவம் நடந்திருக்கிறது. இந்நகரம் ரைன்லேண்ட்-பாலாட்டினேடில் மாநிலத்தில் உள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் வழக்கமான கண்காணிப்பு போக்குவரத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்தபோதே இரு காவல்துறை அதிகாரிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 24 வயது ஆண்  மற்றும் 29 வயது பெண் காவல்துறை அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அந்த இரு அதிகாரிகளும் கட்டுபாட்டு அறைக்கு வோக்கிடோக்கி மூலம் அறிவித்திருந்தனர்.

கொலையாளிகளின் நோக்கம் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய ஆயுததாரியைத் தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Von Admin