• So.. Mai 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மாத சம்பளம் பெறுவோருக்கு காத்திருக்கும் அபாயம்.

Jan. 31, 2022

நாட்டில் அதிகரித்து வருகின்ற கோவிட் காரணமாக எதிர்வரும் காலத்தில் நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படும் பட்சத்தில், மாதாந்த சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நபர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள் என பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வாறான நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்லாதிருப்பதற்கான பொறுப்பு, நாட்டு மக்கள் வசமே காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் மூன்று தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்வது மாத்திரமன்றி, சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், இவ்வாறான பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed