• So. Nov 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழப்பு

Jan 31, 2022

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அவர் அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி டெங்கு காரணமாக உயிரிழந்தாரா? என்பது தொடர்பில் கண்டறியுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் இன்று திங்கட்கிழமை காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed