வடமராட்சி உடுப்பிட்டி வல்லையினையண்டிய விறாச்சிக்குளப் பகுதியில் தீடீர் வெள்ளத்தில் வெளியே வந்த முதலையை அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று உடுப்பிட்டி விறாச்சிக்குளத்தை அண்மித்த வெற்றுக் காணியொன்றில் முதலை வந்ததை அவதானித்தோர் அதனை வலைபோட்டு பிடித்து கயிற்றால் கட்டியுள்ளனர்.

பின்னர் வனஜீவராசிகள் துறையினருக்கு அறிவித்ததையடுத்து  முதலமை மீட்கப்பட்டுள்ளது. மிக நீளமான இந்த முதலைப் பார்ப்பதற்கு அப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Von Admin