சுவிஸ் கூட்டாட்சி அரசின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா விதிமுறைகள்.*17.02.2022 வியாழக்கிழமையில் இருந்து உணவகங்கள், வியாபார நிலையங்களுக்குள் முகக்கவசம் அணியவேண்டியதில்லை.* வைத்தியசாலை மற்றம் பொதுப்போக்குவரத்திலும் மார்ச் இறுதிவரை முகக்கவசம் அணிய வேண்டும்.* சுவிஸ் நாட்டுக்குள் மாத்திரம் கொரோனா சான்றிதழ் நாளைய தினத்தில் இருந்து காண்பிக்க வேண்டிய தேவை இல்லை. *கொரோனா சான்றிதழ் வெளிநாட்டு போக்குவரத்து பயன்பாட்டிற்கு தேவை* கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மார்ச் 31 திகதிவரை தற்போது உள்ள 5 நாள் தனிமைப்படுத்தலை நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.* பொதுவான, தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு ஒன்றுசேரும் மக்களின் எண்ணிக்கை கட்டுப்பாடு நாளைய தினத்தில் இருந்து முடிவுக்கு வருகின்றது. இருப்பினும் மண்டப, மைதான, மாநில பொறுப்பானவர்கள் அதனை கட்டுப்படுத்த முடியும்.* வீட்டிலிருந்து பணி செய்யும் நடைமுறை முடிவுக்கு வருகின்றது. நிறுவனங்கள், திணைக்களங்கள், தொழில் நிலையங்கள், மாநிலம் ஆகியன தங்கள் விருப்பப்படி இதனை தீர்மானிக்கலாம். *நோயுற்று இருப்பவர்கள் வைத்தியரின் சான்றிதழுடன் அல்லது ஆலோசனைப்படி தேவைப்படின் வீட்டில் இருந்து வேலை செய்யலாம். இதனையும் நிறுவனங்கள், திணைக்களங்கள், தொழில் நிலையங்கள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளலாம்.
சுவிஸ் அரசின் பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று புதிய கொரோனா விதிமுறைகள்.
3d Map outline and flag of Switzerland, It is consists of a red flag with a white cross in the centre with text Switzerland. 