பிரான்சின் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒருவயோதிபப் பெண் காணாமல் போயுள்ளார்.

குறித்த தீ விபத்து பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள வணிக நிலையத்தில் ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியது. பின்னர் தீ மளமளவென அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியது. 

இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார்.

வெடிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை அவசர சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணைகளை காவல்துறையினர் நடந்தி வருகிறது. காணாமல் போன 66 வயது பெண்ணை அதிகாரிகள் இன்னும் தேடி வருகின்றனர்.