யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று (21) இரண்டாம் கட்டத் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகின்றன.

கடந்த மூன்று மாதங்களுக்கு முதல் தமது முதலாவது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இன்று முதல் தமது இரண்டாவது தடுப்பூசியைத் தமது பிரதேசங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் இன்று இரண்டாம் கட்டத் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகின்றன என்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பிரிவுக்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்

Von Admin