யாழ்ப்பாணத்தில் தெருநாய் ஒன்று வெளிநாட்டவர் உட்பட 11 பேரை கடித்து குதறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

யாழ்ப்பாணம் நகரில் நேற்று வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை நாய் கடித்துள்ளது. இந்த நாய் ஏற்கனவே பத்துப் பேரை கடித்துள்ளதாக தெரிய வருகிறது.

எனினும் இந்த நாய் தொடர்பில் எந்த தகவலையும் யாழ்ப்பாண நகர சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதுவரையில் கண்டுபிடிக்க தவறியுள்ளனர்.

குறித்த நாய் வீட்டில் வளர்க்கப்பட்டதா அல்லது தெரு நாயா என்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை. குறித்த நாயினால் கடிக்கப்பட்ட 11 பேரும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Von Admin