யாழ்ப்பாணத்தில் இரத்தக் கறையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொன்னாலை பருத்தித்துறை வீதியில், பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே நபர் ஒருவரின் சடலம் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காணப்படும் உடலம் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மரணம் விபத்தா? அல்லது சதி வேலையா? என இளவாலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.