• Sa.. Mai 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பான அறிவிப்பு!

März 13, 2022

யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(14) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது. அதேவேளை நோயாளிகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed