எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு வெளியாகிய 2021 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அந்நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் சூம் வகுப்பினூடாகவே எனது படிப்பினை மேற்கொண்டேன். எனது அம்மா ஆசிரியர், அப்பா வியாபாரம் செய்கிறார்.

எனது அம்மா மற்றும் அப்பா ஊக்கமளித்ததன் காரணமாகவும் எனது பாடசாலையின் வகுப்பாசிரியர் மற்றும் எனது ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாகவே இந்த பெரு வெற்றியைப் பெற முடிந்தது.

அத்தோடு எதிர்காலத்தில் நான் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன்” இவ்வாறு கூறியுள்ளார்.