யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து காயங்களுடன் யாசகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து நிலையத்தில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில் சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் , குறித்த நபர் அப்பகுதிகளில் யாசகம் பெறுபவர் என்றும் , அவரது பெயர் விபரங்கள் அப்பகுதியினருக்கு தெரிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Von Admin