• So.. Mai 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கண் சத்திர சிகிச்சைகள்!

März 21, 2022

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையால் யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்று பதில் பணிப்பாளர் மு. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இதனைத் தெரிவித்தார்.மேலும்,“கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

மேலும் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன. இதனாலேயே சத்திர சிகிச்சை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மருந்துகளுக்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அவை எமக்கு கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed