200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமை வாய்ந்த நவக்கிரி கொட்டுவெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயப் பிலவ வருட மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை புதன்கிழமை(23-03-2022) முற்பகல்-11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக 15 தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது என மேற்படி ஆலய பரிபாலன சபையின் செயலாளர் விநாசித்தம்பி திருச்செந்தூரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-31 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு-08.30 மணிக்குத் திருமஞ்ச உற்சவமும், அடுத்தமாதம்-02 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-08.30 மணிக்கு மாங்கனி உற்சவமும், 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-05 மணிக்குத் திருவேட்டை உற்சவமும், அடுத்தமாதம்-04 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-08.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் புதன்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலங்களில் தினமும் பிற்பகல்-01 மணியளவில் மகேஸ்வர பூசை(அன்னதானம்) இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Von Admin