குப்பிழான் வடக்கில் வீட்டு வளவினுள் அமைந்துள்ள நீச்சல் தடாகமொன்றில் நீந்திய நிலையில் தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(20.3.2022) பகல் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து குறித்த நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த குறித்த இளைஞன் நீந்திவிட்டு எழும்பி வெளியே வர முயற்சித்த போது தவறி விழுந்து தலையின் பின்பக்கத்தில் அடிபட்டுப் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை(22.3.2022) பிற்பகல்-2.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில் குப்பிழானைச் சேர்ந்த உதயகுமார் நிரோசன்(வயது-33) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இதேவேளை, குறித்த சம்பவம் குப்பிழானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Von Admin