யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் 20 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு படுக்கை வசதிகள் இன்றி நடைபாதையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விடுதிகளில் மகப்பேற்றுக்காக தங்கியிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கர்ப்பவதிகள் பிற சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருக்கு கட்டில் வசதிகள் இல்லை எனவும், இவர்கள் நடைபாதையில் பாயை விரித்து படுத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடை பாதையில் படுத்திருப்பதற்கும் போதியளவு இடவசதிகளின்றி மிக நெருக்கமாகவே படுத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.