• Mo. Dez 9th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவன்

Mrz 29, 2022

முல்லைத்தீவில் கல்வி பொதுத்தரதாரதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதால் அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோரினால் இன்று(28) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் உண்ணாப்பிலவு பகுதியினை சேர்ந்த 16 அகவையுடைய கே.சானுயன் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுவன் 17.03.2022 அன்று மாலைநேர கல்விக்காக மாலை 6.00 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இன்று வரையும் அவர் வீடு திரும்பாத நிலையில் இவரின் தொடர்புகள் அற்ற நிலையிலும் கண்டுபிடித்து தருமாறு பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் கடந்த காலங்களில் பதிவாகி வருகின்றன.

மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும். குறிப்பாக போதைவஸ்து பாவனை மற்றும் தவறானவர்களின் தொடர்பினால் மாணவர்களின் எதிர்கால செயற்பாடுகள் சீரழிந்து செல்கின்றமை மாணவர்கள் மத்தியில் அதிகரித்து செல்லும்.

கையடக்க தொலைபேசி பாவனையினாலும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகிவருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மாணவனை அறிந்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0775690671 தொலைபேசி இலகத்திற்கோ அறியத்தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

  • Share:
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed