திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாற்றில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில், சுகாதார ஊழிய உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிண்ணியா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக பணிபுரியும் 42 வயதான யோதிமணி மூதூர் – கடற்கரைசேனையை சேர்ந்தவர் ஆவார்.

சம்பூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்று மீண்டும் திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் , கிண்ணியா – மட்டக்களப்பு பிரதான வீதியில் உப்பாறு பாலத்துக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது.

பின்புறமாக வந்த பஸ் அவரை முந்திச்செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதியதாக கூறப்படுகின்ற்து. இதில் சம்பவ இடத்லேயே பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.