பிரான்ஸில் இருந்து தீர்வை வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட 01 கிலோ 430 கிராம் தங்கம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் யாழை சேர்ந்த 39 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கச்சங்கிலி மற்றும் pendent ஆகியவற்றை சூட்சுமமாக மறைத்து வைத்து சந்தேகநபர் கொண்டுவந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸாரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Von Admin