• Sa. Dez 14th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உக்ரைன் போர்: அணு ஆயுதங்கள் வீசப்பட்டால். தயாராகும் சுவிட்சர்லாந்து

Apr 5, 2022

உக்ரைன் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை பல நாடுகளும் உணரத் துவங்கி வருகின்றன.

சில நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்தாயிற்று, சில நாடுகளில் கோதுமை முதலான உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகத் துவங்கியுள்ளது.

இந்நிலையில், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பொதுமக்களையும் புடின் கொன்று குவித்து வரும் நிலையில், இந்த ஆள் அணுகுண்டு வீசினாலும் வீசிவிடுவார் என்கிற ரீதியில் சில நாடுகள் யோசிக்கத் துவங்கிவிட்டன.

அவ்வகையில், சுவிட்சர்லாந்து அணுகுண்டு பாதிப்புக்குத் தப்பும் பதுங்கு குழிகளை தயார் செய்யத் துவங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்து மக்கள் அனைவருமே அடைக்கலம் புகும் அளவுக்கு இடவசதி கொண்ட அந்த பதுங்கு குழிகள் பனிப்போர் காலகட்டத்தின்போது கட்டப்பட்டவையாகும்.

உண்மையில், எப்படி சுவிட்சர்லாந்து சாக்லேட்டுக்கும் கைக்கடிகாரங்களுக்கும் புகழ் பெற்றதோ, அதேபோல பதுங்குழிகளுக்கும் பெயர் பெற்றதாகும்.

கட்டிடங்களுக்குக் கீழே கட்டப்பட்டுள்ள அந்த பதுங்கு குழிகள், சமீப காலமாக மதுபானங்கள் சேமித்துவைக்கப்படுவதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், உக்ரைன் போர் காரணமாக அவை மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் தங்குவதற்காக தயார் செய்யப்பட உள்ளன.

உக்ரைன் அருகில்தான் உள்ளது என்பது போல உணரத்துவங்கியுள்ளார்கள் சுவிஸ் மக்கள் என்கிறார், தெற்கு Wallis பகுதியில் பொது மற்றும் இராணுவ பாதுகாப்பு சேவைகளுக்கு தலைமை வகிக்கும் Noth-Ecoeur. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed