யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும்
வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற வளிமண்டல மேலடுக்கு சுழற்சி முல்லைத்தீவுக்கு கிழக்கே 300 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு யாழ்.மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழையைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இம் மழை இடி மின்னலுடன் கூடிய மழையாக இருக்கும் என்பதனால் மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும் எனவும் அவர் கேட்டுள்ளார்.இந்த அறிவிப்பை அவர் இன்று முற்பகல்-10 மணியளவில் வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை(08.4.2022) முற்பகல்-10 மணி முதல் பகல் வேளை அடைமழை பெய்துள்ளது.