சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரும் போது, விசா இல்லாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கைப் பொது மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிரச்சினைகள் இருந்த போதிலும், புலம்பெயர் இலங்கையர்கள் தங்களுடைய வதிவிட விசாவை இன்றுவரை பெற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்கள் திடீரென பிடிபட்டு மறுநாள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

எனவே விசா இல்லாமல் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களுக்கும், அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தவர்களுக்கும் உங்கள் வழக்கறிஞரின் ஆலோசனை பெற்று  எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் லூசர்ன் மாகாணத்திலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.