சீனாவின் சோங்கிவிங் ஜியங்பெய் விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சோங்கிவிங் ஜியங்க்பெங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து திபெத்திய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று இன்று காலை லாசாவிற்கு புறப்பட்டது.
113 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் ஓடுதளத்தில் சென்றபோது திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் மட்டும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Von Admin