ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடல் நீர் உள்வாங்கிய நிலையில் கடலில் உள்ள பவள பாறைகளும், சாமி சிலைகளும் வெளியே தெரிய தொடங்கியுள்ளன.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புயல் காரணமாக நல்ல மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முதலாக ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கடல் நீர் உள்வாங்க தொடங்கியுள்ளது. இதனால் படகுகள் கரை தட்டி நிற்கின்றன.

மேலும் கடல்நீர் உள்வாங்கியதால் உள்ளே இருக்கும் பவள பாறைகளும், சாமி சிலைகள் சிலவும் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. அதேசமயம் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக மீன் பிடிக்க செல்லவில்லை.

Von Admin