• Mo. Dez 9th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் ?

Mai 16, 2022

நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் சில தீர்மானங்கள் காரணமாக எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த சுற்றறிக்கைகளை ரத்து செய்யுமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை கட்டண அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கி பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையுவுள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக தற்போது இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீட்க முடியாதுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தியவசிய உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed